நம்முடைய இணைய இனைப்பு வேகம் உடையதாக இருந்தாலும் நாம் Mp3,Video,Game,software…இப்படி ஏதாவது ஒன்றை Download செய்யும் போது பொதுவாக அதன் வேகம் குறைவாகவே காணப்படும். இதற்கு காரணம் என்ன வென்றால் நாம் கணினியில் நிறுவியுள்ள Browser ( Firefox , opera , IE ) இல் கூடவே வரும் download manager ஐ பயன்படுத்தி வருவதுதான். download செய்வதற்காகவே என்றே பிரத்தியோகமாக தயாரிக்கப்பட்ட ஒரு மென்பொருளை பற்றி இன்று பார்ப்போம்.


Internet download manager (IDM) இந்த மென்பொருள் download செய்யும் போது ஒரு file ஐ உடைத்து (அளவை) பின்னர் அதனை ஒன்று சேர்க்கின்றது இதனால் நாம் முன்னர் download செய்ததைவிட வேகமாக download செய்வதை நீங்களே அவதானிப்பீர்கள்.இதில் வேறு என்ன வசதிகள் இருக்கு என்று பார்ப்போம்.


01.நாம் Download செய்து கொண்டிருக்கும் போது இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டால் இந்த மென்பொருள் ஆரம்பத்தில் இருந்து Download செய்யாமல்,இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டதில் இருந்து Download செய்ய Resume என்ற வசதி இதில் உண்டு.

02.YouTube இல் உள்ள ஏதாவது ஒரு video வை play செய்தால் போதும் அந்த video வை இலகுவாக Download செய்யும் வசதியும் இதில் உண்டு.

03.நீங்கள் ஏதாவது ஒரு தளத்திற்கு செல்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள் (Facebook) அந்த தளத்தில் ஒரு Audio அல்லது video Play ஆகினால் போதும் அதை நாம் உடனடியாக download செய்து கொள்ளவும் முடியும்.

04.ஒரு File ஐ உடனடியாக Download செய்ய வேண்டிய கட்டாயம் ஒன்றும் இதில் இல்லை அதாவது நமக்கு எப்போது நேரம் கிடைக்குமோ அப்போது download செய்து கொள்வதற்கு Download later என்ற வசதியும் இதில் உண்டு.

இன்னும் பல வசதிகளை கொண்ட இந்த IDM ஐ Download செய்ய

0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
PC TRICKS © 2013. All Rights Reserved. Share on Ads Network Reviews. Powered by Blogger
Top