புகழ் பெற்ற மேகின்டோஷ் கணினிகளில் இருந்த பயனாளர் விவரங்கள் பிறரால் திருடப்படும் அபாயம் இருந்தது. அதைப் போக்கும்வகையில் கூடுதல் பாதுகாப்பு இப்போது சேர்க்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்னை OS X ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இருந்த ஓர் ஓட்டையினால் நிகழ்ந்தது. ஐஃபோன், ஐபேட், ஐபாட் டச் போன்றவற்றிலும் இதே ஓட்டை இருந்தது, அனைத்தும் இப்போது சரி செய்யப்பட்டுவிட்டது.
ஆனால், அதற்குமுன்னால் யாராவது விவரங்களைத் திருடியிருப்பார்களோ?
‘வாய்ப்பில்லை’ என்கிறார்கள் பாதுகாப்புத் துறை நிபுணர்கள். ’அப்படி எதுவும் நிகழ்ந்த அடையாளங்களும் இதுவரை இல்லை!’
’ஒருவேளை இந்தப் பிழை இப்போது கண்டறியப்பட்டிருக்காவிட்டால், ஹேக்கர்கள் இந்தக் கணினிகள், ஃபோன்கள், மற்ற கருவிகளின்வழியே பொது நெட்வொர்க்குகளில் அனுப்பப்படும் தனிப்பட்ட செய்திகள், ஈமெயில்கள், சோஷியல் மீடியா பதிவுகள், ஏன் வங்கிக் கணக்கு விவரங்களைக்கூடப் பார்த்திருக்கக்கூடும்’ என்கிறார் பாதுகாப்புத் துறை நிபுணர் டிமிட்ரி அல்பெரோவிச், ‘மென்பொருள் பிழையால் இந்த ஓட்டை ஏற்பட்டுவிட்டது. அதை இப்போது கண்டுபிடித்துச் சரி செய்துவிட்டார்கள்.’

0 comments Blogger 0 Facebook

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
PC TRICKS © 2013. All Rights Reserved. Share on Ads Network Reviews. Powered by Blogger
Top