கணினி சந்தையில் இன்று அதிகமாக விற்பனையாகி  கொண்டிருக்கும் ஆண்ட்ராய்ட் மற்றும் 
ஆப்பிள் கைக்கணினிகளுக்கு (டேப்லெட்) போட்டியாக நீண்ட ஆராய்ச்சிக்கு பின் மைக்ரோசாப்ட் நிறுவனம் சர்ஃ பேஸ்  என்னும் புதிய கைக்கணினியை கடந்த ஜூன் மாதம் வெளியிட்டது. பொது பயன்பாட்டிற்கு வரும் அக்டோபர் மாதம் 26-ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது மற்றும் இதற்கான முன்பதிவை கடந்த 16-ஆம் தேதி துவக்கியுள்ளது.

டெஸ்க்டாப் மற்றும் மடிக்கணினிகள் விற்பனையில் மைக்ரோசாப்ட் ஆதிக்கம் அதிகம் இருந்தது ஆனால் மொபைல் மற்றும் கைக்கணினி சந்தையில் வெற்றி பெறமுடியவில்லை.
இதனால் நீண்ட இடைவெளிக்குப்பின் விண்டோஸ் 8 இயங்குதளம் மற்றும் பல புதிய தொழில்நுட்பத்துடன் களத்தில் இறங்கியுள்ளது. இந்த முயற்சி மைக்ரோசாப்ட்-க்கு வெற்றியா? இல்லை தோல்வியா? என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இந்த மைக்ரோசாப்ட் சர்ஃ பேஸ்  இரண்டு பிரிவுகளில் வருகிறது.
1. மைக்ரோசாப்ட் சர்ஃ பேஸ்  RT
2.மைக்ரோசாப்ட் சர்ஃ பேஸ்  Pro

முதலில் விற்பனைக்கு வருவது சர்ஃ பேஸ் RT ஆகும்.அடுத்த மூன்று மாதத்தில் சர்ஃ பேஸ் Pro வெளிவரும் என மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.அது சரி இவை இரண்டிற்கும் என்ன வித்தியாசம் என்று வினவுகிறீர்களா?பயன்படுத்தப்படும் தொழிநுட்பம் மற்றும் அதற்கேற்ற விலை மட்டுமே.இவை இரண்டுக்குமான வித்தியாசம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சர்ஃ பேஸ் RT 

பிராசசர்(நுண்செயலி)    - ARM  Cortex-A49
மெமரி (நினைவகம்)      - 2GB 
திரை   - 1366 x 768 px 10.6 inches 
அகலம்   10.81 அங்குலம்  (27.5 செ.மீ)
உயரம்    6.77 அங்குலம் (17.2  செ.மீ)
தடிமன்   0.37 அங்குலம் (9.4  செ.மீ)
மின்சாரம் :31.5 W
கேமரா:  720 பிக்சல் முன்/பின் பக்கம்
எடை : 680 கிராம் 

இயங்குதளம் (OS)  : மைக்ரோசாப்ட் விண்டாஸ் 8 RT
மெமரி கார்டு : 64 GB SDXCஅதிகபட்ச அளவு 

 சர்ஃ பேஸ் Pro 
பிராசசர்(நுண்செயலி) - இன்டெல் கோர் i 5
மெமரி (நினைவகம்)    -  2GB
திரை -  
அகலம்   10.81 அங்குலம்  (27.5 செ.மீ)
உயரம்    6.81 அங்குலம் (17.2  செ.மீ)
தடிமன்   0.51 அங்குலம் (9.4  செ.மீ)
மின்சாரம் :42 W
கேமரா:  720 பிக்சல் முன்/பின் பக்கம்
எடை : 910 கிராம்
 
இயங்குதளம் (OS) : மைக்ரோசாப்ட் விண்டாஸ் 8 PRO
மெமரி கார்டு : 128 GB SDXCஅதிகபட்ச அளவு 


கீபோர்ட் எளிதாக ஒட்டி எடுக்க கூடிய வகையில் விளிம்புகளில் காந்தங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை பல வண்ணங்களில் கிடைக்கிறது.
 



பின் புறம்  கைக்கணினியை நிமிர்த்தி வைத்து தாங்கி பிடிக்க ஒரு நிருத்தியை(stand) இணைத்து வைத்துள்ளனர்.

 
 

மைக்ரோசாப்ட் சர்ஃ பேஸ் RT யின் விலை  $499 டாலர் ஆகும் இதனுடன் இந்த கீபோர்டையும் சேர்த்து வாங்கினால்  $119 டாலர் கூடுதல் செலவாகும். இதை விட குறைந்த விலையில் கிடைக்கும் ஆண்ட்ராய்டு கைக்கணினிகளுடன் போட்டியிட்டு கணினி சந்தையில் தன்னை நிலைநிறுத்தி கொள்ளுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
PC TRICKS © 2013. All Rights Reserved. Share on Ads Network Reviews. Powered by Blogger
Top