வலைப்பதிவர்கள் பலருக்கு தங்கள் ப்ளாக் மூலம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ப்ளாக் மூலம் சம்பாதிக்க கூகுளின் ஆட்சென்ஸ் (Google Adsense) நமக்கு உதவுகிறது. ஆனால் தமிழ் தளங்களுக்கு ஆட்சென்ஸ் மூலம் விளம்பரம் வைக்க அனுமதி இல்லை.

இதற்கு மாற்றாக தமிழ் தளங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள விளம்பர இணையத்தளம் Ad30days.in 

உங்கள் ப்ளாக்கில் விளம்பரம் வைக்க விரும்பினால் இங்கே க்ளிக் செய்து புதிய கணக்கை உருவாக்கவும்.


பிறகு இடதுபுறம் Add New Site என்பதை க்ளிக் செய்யுங்கள்.


உங்கள் ப்ளாக் பற்றிய விவரங்களை கொடுக்கவும்


பிறகு உங்கள் ப்ளாக் தொடர்பான குறிச்சொற்களை கொடுங்கள்


பிறகு Banner Ads என்பதில் டிக் இருக்கும். Next என்பதை க்ளிக் செய்யுங்கள்


பிறகு Banner Setting என்பதில் உங்களுக்கு எந்த அளவு விளம்பர படம் வேண்டுமோ அதை க்ளிக் செய்து Next க்ளிக் செய்யுங்கள்


பிறகு விளம்பர படத்தின் நிறத்தை தேர்ந்தெடுத்து Next க்ளிக் செய்யுங்கள்

Default Ad setting என்பதில் எதுவும் செய்யாமல் Next க்ளிக் செய்யுங்கள்

நீங்கள் வைக்க வேண்டிய விளம்பரத்தின் நிரல் கிடைக்கும்.


இந்த நிரலை காப்பி செய்து உங்கள் ப்ளாக்கில் Add a Gadget மூலம் இணைக்கலாம். அந்த விளம்பரத்தை க்ளிக் செய்யப்படுவதைப் பொறுத்து வருமானம் கிடைக்கும்.

குறைந்தபட்சம் ஐந்து டாலர் வந்ததும் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
PC TRICKS © 2013. All Rights Reserved. Share on Ads Network Reviews. Powered by Blogger
Top