![]() |
தொழிநுட்ப நண்பன் |
தென் கொரியாவானது முழுமையான திரைப்படமொன்றை ஒரு செக்கனில் பதிவிறக்கம் செய்யக்கூடிய 5 ஆம் தலைமுறை கையடக்கத்தொலைபேசி இணையத்தள சேவையை அறிமுகப்படுத்த தயாராகியுள்ளது.
இதன் பிரகாரம் மேற்படி '5 ஜி' என்ற ஐந்தாம் தலைமுறை கையடக்கத் தொலைபேசி சேவைகளில் 900 மில்லியன் ஸ்ரேலிங் பவுணை தென் கொரியா முதலீடு செய்துள்ளது.
இந்த சேவையை பரீட்சார்த்தமாக 2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தவும் அதனை 2020 ஆம் ஆண்டு டிசம்பருக்குள் வர்த்தக ரீதியாக செயற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேற்படி தொழில்நுட்பமானது ஒரு செக்கனில் 800 மெகா பைட் அளவான திரைப்பட கோப்பை பதிவிறக்கம் செய்வதற்கு பயன்பாட்டாளருக்கு அனுமதிக்கிறது.
இது 4 ஆம் தலைமுறை கணனிகளை விட 1000 மடங்கு வேகமானதாகும்.
0 comments Blogger 0 Facebook
Post a Comment