யு டியூப்ல்(youtube) உள்ள வீடியோக்களை நீங்கள் உங்கள் லேப்டாப் அல்லது ஸ்மார்ட் டிவி மூலம் பிளே(play) செய்து பின் உங்கள் மொபைல் மூலம் அவற்றை கையாளலாம். அது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்.
உங்கள் லேப்டாப்(laptop) அல்லது ஸ்மார்ட் டிவியில்(Smart TV) கீழ்காணும் முகவரிக்கு செல்லவும்( வெப் பிரவுசர் மூலம் ),
https://www.youtube.com/tv
பின்பு இடது புறத்தில் Settings உள்ள ஐக்கானை கிளிக் செய்யவும்.
கீழ்காணும் விண்டோ காட்டப்படும்.அதை கிளிக் செய்யவும்
அதில் உங்கள் டிவைசை(device( tablet, smart phone, laptop ) இணைக்க கோடு(Pair code) காட்டப்படும். மேலும் ஒரு லிங்க்(youtube.com/pair) கொடுக்கப்படும்.
இந்த லிங்கை(youtube.com/pair) உங்கள் ஸ்மார்ட் போனில் உள்ள பிரவுசர் மூலம் திறக்கவும். அது உங்களிடம் லேப்டாப்பில் அல்லது ஸ்மார்ட் டிவியில் காட்டப்பட்ட கோடினை(pair code) தரும்படி கேட்கும்.
அவ்வாறு நீங்கள் அந்த கோடை தரும் பட்சத்தில் லேப்டாப் அல்லது ஸ்மார்ட் டிவின் யு டியூப் வீடியோகளை நீங்கள் மொபைல் போனில் இருந்து கையாளலாம்(அடுத்த வீடியோக்கு செல்வது, வீடியோகளை நிறுத்த, பிளே(play) செய்ய, வீடியோகளை தற்காலிகமாக நிறுத்த).
அதாவது கிட்டதட்ட ஒரு ரிமாட் கன்ரோல் போல் உங்கள் ஸ்மார்ட் போனானது செயல்படும்.
இதற்கு தேவை இன்டர்நெட் இணைப்பு மட்டுமே.ஒரு டிவைசை இன்னொரு டிவைசுடன்(device) இணைத்து நாம் பயன்பெறுகின்றோம்.இந்த டெக்னாலேஜ்க்கு யுடியூப் லீன்பேக்( youtube leanback) என பெயர்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments Blogger 0 Facebook
Post a Comment