சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கிடையே போட்டி பல காலமாக இருந்து வருகின்றது அனைவரும் அறிந்ததே. இது குறித்து இரு நிறுவனங்களின் கருவிகளை பயன்படுத்துவோரிடையே சச்சரவுகளும் அரங்கேறி வருகின்றது. இந்நிலையில் சமீபத்தில் இரு நிறுவனங்களின் கருவிகளும் சநிதையில் வெளியாகியுள்ளது.

புத்தாண்டு சலுகை 50 சதவீதம் தள்ளுபடி கொண்ட டாப் 10 ஸ்மார்ட்போன்கள் 


சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 4 மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 6+ வெளியாகி நேரடியாக கலத்தில் போட்டி போடுகின்றன. இரு ஸ்மார்ட்போன்களும் சிறப்பம்சங்களை பொருத்த வரை பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருந்தாலும் சில வேறுபாடுகள் இவைகளை சிறந்த ஸ்மார்ட்போனாக மாற்றுகின்றன. அந்த வகையில் சாம்சங் கேலக்ஸி நோட் 4 மற்றும் ஐபோன் 6+ ஸ்மார்ட்போனை விட சிறந்தது என்பதை விளக்கும் அம்சங்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்.....

கேலக்ஸி நோட் 4 ஐபோனின் 8 எம்பி கேமராவுடன் ஒப்பிடும் போது இருமடங்கு அதிக ரெசல்யூஷன் கொண்டுள்ளது.


இந்த காலத்தில் ஸ்மார்ட்போன் வாங்கும் அனைவரும் முன்பக்க கேமராக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அந்த வகையில் நோட் 4, 3.7 எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ் கொண்டுள்ளது. அந்த வகையில் ஐபோன் கேமரா குறைந்த ரெசல்யூஷன் கொண்ட முன்பக்க கேமராலே கொடுக்கப்பட்டுள்ளது.

பயன்பாடு 

பெரிய போன்களை தயாரிக்கும் போது பயன்படுத்துவதில் சிரமம் ஏற்படாமல் இருக்க வேண்டும். அந்த வகையில் ஐபோன் 6+ ஸ்மார்ட்போனை விட கேலக்ஸி நோட் 4 கையில் கச்சிதமாக பொருந்துவதோடு பயன்படுத்தவும் ஏதுவாக இருக்கின்றது.

எஸ்-பேனா பயன்படுத்தி நோட் 4 ஸ்மார்ட்போனில் குறிப்புகளை எடுப்பது சுலபமாவதோடு குறிப்புகளை எவர் நோட் மற்றும் ஒன்நோட் செயளிகளிலும் இணைக்க முடியும்.

0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
PC TRICKS © 2013. All Rights Reserved. Share on Ads Network Reviews. Powered by Blogger
Top