கூகுள் பிளே பரிந்துரைத்துள்ள ஆப்ஸ்களை (Apps) மட்டுமே பயன்படுத்தினால் மால்வேர் தாக்குதல்கள் மிகக்குறைவாகவே இருக்கும் என கூகுள் தெரிவித்துள்ளது.தற்போது ஸ்மார்ட் போன்களின் (Smart Phone) பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், அதில் ஆண்ட்ராய்டை (android) பயன்படுத்துபவர்களுக்கு கூகுள் (Google) சிறந்த சேவையை வழங்கி வருகிறது. உலகம் முழுவதும் 80 சதவீத ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தையே பயன்படுத்துகிறது. ஸ்மார்போன் வழியாக இணையத்தில் மூழ்கி கிடப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதை சாதகமாக பயன்படுத்தி ரகசிய தகவல்களை திருடும் வைரஸ் புரோகிராம்கள் (Program), இணைய நடவடிக்கைகளை உளவு பார்க்கும் மால்வேர்கள் (Malware) ஆண்ட்ராய்டு மொபைல்களை குறிவைக்க தொடங்கின. இது பிரபல மொபைல் இயங்குதளமான ஆண்ட்ராய்டுக்கு பெரிய சவாலாக இருந்தது. இந்நிலையில், மொபைல் பிளாட்பார்மில் செக்யூரிட்டி அப்கிரேடுகளை (security upgrade) அதிகரித்துள்ள கூகுள், வைரஸ்களின் தாக்குதல்களை சென்ற ஆண்டை விட 50 சதவீதம் அளவுக்கு குறைத்திருப்பதாக அறிவித்துள்ளது. குறிப்பாக, 2014ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, உலகம் முழுவதும் சுமார் 1 பில்லியன் ஆண்ட்ராய்டு கருவிகள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றில் கூகுள் பிளே (Google Play) வழியாக ஒரு நாளைக்கு 200 மில்லியனுக்கும் அதிகமாக செக்யூரிட்டி ஸ்கேன்கள் (security scan) செய்யப்படுகின்றன. இவ்வாறு பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்க களமிறங்கிய கூகுள் தற்போது மால்வேர்களை கட்டுப்படுத்தியிருக்கிறது. |
Subscribe to:
Post Comments (Atom)
0 comments Blogger 0 Facebook
Post a Comment