உங்கள் கணினியில் ஒரு கோப்புறையை மறைக்க இந்த ட்ரிக் எளிமையாக இருக்கும். பெரும்பாலானவர்களுக்குத் இது தெரியும்.
Folder Option சென்று Hidden கொடுத்தால் போதும். நீங்கள் மறைக்க நினைக்கும் போல்டர் மறைந்துவிடும். மீண்டும் மறைக்கப்பட்ட கோப்புறையைப் பெற அதேபோல Properties சென்று மீண்டும் Hidden என்பதில் டிக் அடையாளத்தை
எடுத்துவிட்டு ok கொடுத்தால் மீண்டும் மறைக்கப்பட்ட போல்டர் மீண்டும் தெரியும்.
போல்டரை மறைக்க மற்றுமொரு வழி: இது சற்று பாதுகாப்பாக இருக்கும். இந்த முறையில் நீங்கள் தேர்வு செய்யும் போல்டரானது முற்றிலும் மறைக்கப்பட்டுவிடும். இந்த முறையில் மறைக்கப்படும் Folder யாராலும் கண்டறிய முடியாது. போல்டர் இருக்கும் இடத்தை சரியாக நினைவு வைத்து அதை பயன்படுத்த வேண்டும். ஒரு வேளை நீங்களே மறந்துவிட்டால் கூட அந்த போல்டரை நீங்கள் மீண்டும் தேடிப்பெறுவது கடினம்.
யாருமே பார்க்கமுடியாதபடி போல்டர் அமைக்க:
உங்கள் போல்டரின் மீது ரைட் கிளிக் (Right click) செய்யுங்கள். தோன்றும் விண்டோவில் Properties என்பதைக் கிளிக் செய்யவும். இப்போது தோன்றும் விண்டோவில் General, Sharing, Security, Previous version, மற்றும் Customize என்ற வரிசையில் Tabs இருக்கும். அதில் Customize என்பதை கிளிக் செய்தால் கீழ்க்காணும் விண்டோ திறக்கும். படத்தில் காட்டப்பட்டுள்ளது போல இருக்கும்.
இந்தப் பெயரும் வேண்டாம்... முழுமையாக மறைக்க வேண்டும் என்றால்... ஐகான் இல்லாத போல்டரை செலக்ட் செய்துகொள்ளவும். பிறகு F2 என்பதை கிளிக் செய்யுங்கள். போல்டருக்கு Rename கொடுக்க ஷார்ட் கட் F2. எனவே F2 என்பதை கிளிக்செய்தால் பெயர்மாற்றலாம். உங்கள் கணினியில் உள்ள விசைப்பலகையில் Alt விசையை அழுத்திக்கொண்டு 0160 என தட்டச்சு செய்யவும். உடனே பெயரானது மறைந்துவிடும். இப்போது முற்றிலும் உங்கள் கோப்புறை மறைக்கப்பட்டுவிடும். போல்டர் இருக்கும் இடத்தில் கிளிக் செய்துபார்த்தால்தான் போல்டர் செலக்ட் ஆகும். ஆனால் போல்டர் ஐகானோ, போல்டரின் பெயரோ கண்ணுக்குத் தெரியாது. இதனால் பலரும் பயன்படுத்தும் பொதுக் கணினிகளில் உங்களுடைய கோப்புகளை மற்றவர்களுக்குத் தெரியாமல் மறைத்து வைக்கலாம்.
இந்தப் பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்ததா?
உங்கள் கருத்துகளை மறக்காமல்...பகிருங்கள்...
0 comments Blogger 0 Facebook
Post a Comment